RANIPET 01.03.2026
அரக்கோணம் ரயில் பயணிகள் சங்க செயற்குழு கூட்டம்.
அரக்கோணம் ரயில் பயணிகள் சங்கத்தின் 2026 - 2027 ம் ஆண்டுகளுக்கான முதல் செயற்குழு கூட்டம் சுவால்பேட்டை தர்மராஜா கோயில் திடலுக்கு எதிரில் அமைந்துள்ள அனைத்து மளிகை வியாபாரிகள் சங்க திருமண மண்டபத்தில் சங்க தலைவர் நைனா மாசிலாமணி தலைமையில் நடைபெற்றது.பொதுச்செயலாளர் A. தியாகராஜன்,பொருளாளர்.
S. ஏகாம்பரம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.ரயில் பயணிகள் சங்க ஆலோசனை குழு உரியன முருகன் பார்மசி
ஆர். வெங்கடரமணன் அனைவரையும் வரவேற்றார்.
கூட்டத்தில் அரக்கோணம் சந்திப்பு ரயில் நிலையம் மிகப்பெரிய ரயில் நிலையம் இங்கு பயணிகளுக்கு அடிப்படை வசதி செய்து தரப்படவில்லை அதிகாரிகள் மெத்தனமாக செயல்படுகிறார்கள். ரயில்வே அதிகாரிகளை ரயில் பயணிகள் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. குறிப்பாக ரயில் நிலையத்தில் ஒரு கழிவறை கூட இல்லை இதனால் பெண்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள் .ரயில்வே நிர்வாகம் அரக்கோணம் ரயில் நிலையத்தில் பயணிகளுக்கு அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்து தர வேண்டும் என நிர்வாகிகள் பேசினார்கள். கூட்டத்தில் கௌர ஆலோசகர் ஜிடிஎன் அசோகன், ஆலோசனை குழு உறுப்பினர்கள் கிருஷ்ணமூர்த்தி ,சுரேஷ் பாபு, முக்கிய நிர்வாகிகள் ஜஸ்வந்த் ராவ், சீனிவாசன்,சரஸ்வதி அம்மாள் ,ராஜேந்திரன் உமா ராஜேந்திரன் உள்பட முக்கிய நிர்வாகிகள் ஏராளமான கலந்து கொண்டனர்..
Comments
Post a Comment