அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினர் காந்தி ராஜ் நேத்ரா மல்டி ஸ்பெஷாலிட்டி 24-மணி நேர மருத்துவமனையின் மற்றுமொரு முக்கிய பிரிவாக,V2-ஸ்கேன்ஸ்&டாயாக்னடிஸ் சென்டர் திறப்பு திறந்து வைத்தார்.
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் நகரில் புகழ் பெற்ற மருத்துவமனை யான
நேத்ரா மல்டி ஸ்பெஷாலிட்டி 24-மணி நேர மருத்துவமனையின் மற்றுமொரு முக்கிய
பிரிவாக,V2-ஸ்கேன்ஸ்&டாயாக்னடிஸ் சென்டர் திறப்பு விழாவில் சிறப்பு
அழைப்புலராக அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினர் காந்தி ராஜ் கலந்து கொண்டு
திறந்து வைத்தார்.
முன்னதாக மருத்துவ மனையின் இயக்குநர்கள் மருத்துவர்
உமாபதி ,நேத்ரா திருமலை ,.விமலா திருமலை ஆகியோர், நிகழ்ச்சிக்கு வருகை
தந்த முக்கிய பிரமுகர்களை வரவேற்றனர்.விழாவில் சிறப்பு விருந்தினர்களாக கிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் தலைவர் டி.ஆர்.சுப்பிரமணியன், வணிகர் சங்கங்களின் மாநில பேரவைத் தலைவர் கே.எம்.தேவராஜ், ஜவுளி வியாபாரிகள் சங்க தலைவர் மேஜர் டோனர் பி.இளங்கோ, ரோட்டரி சங்கத்தின் மூத்த உறுப்பினர்கள் மணி,சந்துரு, தமிழ்ப் படைப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் சீ மோகன், செயலாளர் கோ.சுந்தரராஜ், பொருளாளர் கே.பிரபாகரன்,வாணி, கௌரவ ஆலோசகர் ஆர் வெங்கட்டரமணன், கெஜபதி, வெங்கடேசன் வி.ஓ.,சீனிவாசன், ஆகியோர் குத்து விளக்கு ஏற்றி வாழ்த்துரை வழங்கினார்கள்.
Dr.பூஷன் பிரகாஷ், மற்றும் மருத்துவ மனையின் பணியாளர்கள்,நகர முக்கிய பிரமுகர்கள், பங்கேற்றனர்.
Comments
Post a Comment