RANIPET - 24.12.2025

பாரத ரத்னா டாக்டர் எம்ஜிஆர் 38 ஆம் ஆண்டு நினைவு நாள்அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினர் சு.ரவிமலர் தூவி மரியாதை .

 

 

 

ராணிப்பேட்டை  கிழக்கு மாவட்ட அதிமுக சார்பில்  அரக்கோணம் இரட்டைக் கண் தரை பாலம் அருகில் இருந்து பழைய பேருந்து நிலையம் வரை முன்னாள் முதலமைச்சர் பாரத ரத்னா டாக்டர் எம்ஜிஆர் 38 ஆம் ஆண்டு நினைவு நாள் அமைதி ஊர்வலம் நகரச் செயலாளர் பாண்டுரங்கன் தலைமையில் நடைபெற்றது.இதில் அரக்கோணம் சட்டமன்ற உறுப்பினர் சு.ரவி கலந்து கொண்டு எம் ஜி ஆர் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்து ஊர்வலத்தை துவக்கி வைத்தார். ஊர்வலம் காந்தி சாலை வழியாக பழைய பேருந்து நிலையம் வரை சென்றது. அதை தொடர்ந்து அதிமுகவினர் அனைவரும் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர். இந்த ஊர்வலத்தில் மாவட்ட ஒன்றிய நகர பொறுப்பாளர்கள் உட்பட ஏராளமான கலந்து கொண்டனர்.

Comments

Popular posts from this blog