RANIPET 24.12.2025

 

நெமிலி  தி.மு.க மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.

 

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி பேருந்து நிலையத்தில் தி.மு.க மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் ஒன்றிய சேர்மன் வடிவேலு தலைமையில்  ஒன்றிய அரசு  100 நாள் வேலை திட்டத்தில்  காந்தியின் பெயரை நீக்கியது கண்டித்து  மாபெரும் கண்டன  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட கவுன்சிலர் சுந்தராம்பாள் பெருமாள்  ,ஒன்றிய செயலாளர்கள் பெருமாள், ரவீந்திரன், மணிவண்ணன்,ஆகியோர் முன்னிலை வகித்தனர். நெமிலி நகர செயலாளர் ஜனார்த்தனன் அனைவரையும் வரவேற்றார்,ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக  சோளிங்கர் சட்டமன்ற  தொகுதி பொறுப்பாளர் பாஸ்கர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.தமிழகத்தில் 100 நாள் வேலை திட்டம் என்று அழைக்கப்படும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் சில மாற்றங்களை செய்தும், காந்தி  பெயரை நீக்கி, இந்தியில் பெயர் வைத்தும் மத்திய அரசு மசோதாவை நிறைவேற்றியது. மேலும் இந்த திட்டத்திற்கு விபிஜிராம்ஜி என்று பெயர் மாற்றம் செய்து நடைமுறைப்படுத்த உள்ளது. இதை திமுக மற்றும் கூட்டணி காட்சிகள் வன்மையாக கண்டிக்கிறோம் .
 மத்திய அரசு தொடர்ந்து தமிழகத்தை வஞ்சித்து வருகிறது. காந்தியின் பெயரை இந்த திட்டத்தில் இருந்து நீக்கியது பாஜகவின் சதியாகும். தமிழக மக்களின் வளர்ச்சியை பாஜகவோடு சேர்ந்து அதிமுகவும் தடுக்க நினைக்கிறது. என்று நிர்வாகிகள் பேசினார்கள்.. இதில் மாவட்ட துணை செயலாளர் சிவானந்தம் உட்பட முக்கிய நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இறுதியாக மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர் பவானி நன்றி தெரிவித்தார்.

Comments

Popular posts from this blog