கட்டுமானம் மற்றம் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு தமிழக அரசு பொங்கல் பரிசாக ரூ 5000 வழங்க வேண்டும் மாநில தலைவர் டாக்டர் குருவை குமார்
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் நகரில் தனியார் திருமண மண்டபத்தில்
தமிழ்நாடு சங்கமம் கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்
சங்கம் பொதுக்குழு கூட்டம் மாநில தலைவர் டாக்டர் குருவை குமார் தலைமையில்
நடைபெற்றது. கூட்டத்தில் தமிழக அரசு பொங்கல் பரிசு 5000 வழங்க
வேண்டும்,ஓய்வூதியம் உயர்த்த வேண்டும் என பேசினார் தொடர்ந்து பொதுக்குழு
கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா
தொழிலாளர்களின் ஓய்வூதியம் மாதம் 3000 ரூபாயாக உயர்த்த
வேண்டும்,.கட்டுமானம் வாரியத்தின் மூலமாக வழங்கப்பாடு வீடு கட்டும் திட்டம்
தொழிவுடைந்து உள்ளது துரிதமாக செயல்படுத்த அரசு கவனம் செலுத்த வேண்டும்
தமிழ்நாடு
கட்டுமானம் தொழிலாளர்கள் வாரியத்தின் மூலமாக தொழிலாளர்கள்
நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறையின் மூலமாக நடத்தப்பட்ட கட்டுமானம்
தொழிலாளர் திறன் மேம்பாட்டு பயிற்சி தொடர்ந்து நடத்த வேண்டும். தமிழ்நாடு
கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் நலத்திட்ட
உதவிகள் கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா நலவாரியங்களில்
ஒரே மாதிரியான நிதி உதவி வழங்க வேண்டும்.
Comments
Post a Comment