சர்வதேச இந்திய கிறிஸ்தவ திருச்சபை சினாட் பேராலயத்தில்  பிரதம பேராயர் டாக்டர் ஐசக் அய்யா  ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கினார். 

 

 

ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் வின்டர் பேட்டையில் தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் சர்வதேச இந்திய கிறிஸ்தவ திருச்சபை சினாட் பேராலயத்தில்  பிரதம பேராயர் டாக்டர் ஐசக் அய்யா  தலைமையில்  கிறிஸ்துமஸ் விழா  சிறப்பாக கொண்டாடப்பட்டது .காலை ஆலய வளாகத்தில் சிறப்பு பிரார்த்தனை தொடர்ந்து கேக் வெட்டி அனைவருக்கும் பிரதம பேராயர் டாக்டர் ஐசக் அய்யா வாழ்த்து தெரிவித்தார்.தொடர்ந்து
நற்செய்தி வழங்கினார் .அச்செய்தியில்  2025 ஆம் ஆண்டு  கிறிஸ்துமஸ் நன்னாளில் உலக மக்கள் அனைவருக்கும்  சர்வதேச இந்திய கிறிஸ்தவ திருச்சபை சார்பில் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை  தெரிவித்துக் கொள்கிறேன். மக்கள் மத்தியில் அன்பு பெருகி ஜாதி மதம், பேதமின்றி அனைவரும் மகிழ்ச்சியோடு வாழ வேண்டும் பிறருக்கு உதவி செய்ய வேண்டும் என இன் நன்னாளில் கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்தார்.
மேலும்  சர்வதேச இந்திய கிறிஸ்தவ திருச்சபை பேராலயத்தில் ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் அன்னதானம் வழங்கினார்.இதில் வருமான வரித்துறை ஜான்,ஜாஸ்மின் ஜான்,சபை மக்கள் சத்யன், ஸ்ரீதர், மணி, டேவிட் , மீனா ,நாதலின், அன்னாள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Comments

Popular posts from this blog