THENI -24.12.2025
அரக்கோணம்
தேசிய பேரிடர் மீட்பு வீரர்களுக்கு பொதுமக்கள் பாராட்டு .
தேனி மாவட்டத்திலிருந்து பணிக்காக பயணித்த
நான்காவது பட்டாலியன், தக்கோலம் தலைமையகத்தைச் சேர்ந்த தேசிய பேரிடர்
மீட்புக் குழு (NDRF) வீரர்கள், குழு இன்ஸ்பெக்டர் அர்ஜுன் ராஜ்புத்
அவர்களின் தலைமையில் தேசிய நெடுஞ்சாலையில் பயணித்துக் கொண்டிருந்தபோது, ஒரு
ஆட்டோ விபத்தில் சிக்கி கவிழ்ந்தது கண்டனர்.
விபத்தில் சிக்கிய
ஆட்டோவில் பயணித்த முதியவர் பலத்த காயங்களுடன் சாலையில் கிடந்த
நிலையில்,கண்ட NDRF வீரர்கள் உடனடியாக மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
காயமடைந்த
முதியவருக்கு NDRF வீரர்கள் துரிதமாக முதலுதவி அளித்து அவரது உயிரைக்
காப்பாற்றினார்கள் . பின்னர் அவரை மேல் சிகிச்சைக்காக அருகில் உள்ள
மருத்துவமனைக்கு பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர்.
தேசிய பேரிடர் மீட்புக் குழுவினரின் இந்த மனிதாபிமான மற்றும் துரிதமான சேவைக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
Comments
Post a Comment