RANIPET NEMILY 06.01.2026

 

பொங்கல் பரிசு ரூ.3000 , 10 லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப் .தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி,நெமிலி ஒன்றிய குழு கூட்டத்தில் தீர்மானம்..  

 

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில்  மாதாந்திர யூனியன் கவுன்சில் கூட்டம் சேர்மன் வடிவேல் தலைமையில் நடைபெற்றது.
பி டி ஓ ஜெயஸ்ரீ முன்னிலை வகித்தார். கூட்டத்தில்  கவுன்சிலர்கள்
தங்கள் பகுதிக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து கோரிக்கை மனுக்களாக
சேர்மனிடம் அளித்தனர். தொடர்ந்து  கவுன்சிலர்கள் பேசியதாவது.
ஆருண்(சுயேட்சை): பனப்பாக்கம் சிப்காட் வளாகத்தில் உள்ள டாடா மோட்டார்ஸ்
கம்பெனியில் உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவதில் முன்னுரிமை
அளிக்க வேண்டும். துறையூர் - பள்ளிப்பட்டறை ரோட்டை உடனடியாக சீரமைத்து
தர வேண்டும்.
வடிவேல்(சேர்மன்): இது குறித்து மாவட்ட உயர் அதிகாரிகளுக்கு தகவல்
தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
சுகுமார்(அதிமுக): திருமால்பூர் பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம்
அமைக்க வேண்டும்.  குற்றச்சம்பவங்களை தடுக்கும்
சிசிடிவி கேமராக்களை பொறுத்த வேண்டும்.
சேர்மன்: உறுப்பினரின் கோரிக்கையை ஏற்று சிசிடிவி கேமராக்கள் அமைக்க
நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் கூட்டத்தில் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கியதற்காகவும்,
மகளிர் உரிமை தொகை விடுப்பட்ட பெண்களுக்கு மீண்டும் உதவி தொகை
வழங்கியதற்காகவும், பொங்கல் தொகுப்புடன் 3 ஆயிரம் ரூபாய் வழங்கிய தமிழக
முதல்வருக்கு நன்றி தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதில் யூனியன் கவுன்சிலர் விநாயகம், வேளாண்மை உதவி இயக்குநர் அருணாகுமாரி
மற்றும் பிடிஓ அலுவலக அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

RANIPET - NEMILY 06.1.2026

Comments