Posts

Showing posts from January, 2026
Image
 RANIPET - ARAKKONAM 17.01.2026 பாரத ரத்னா டாக்டர் எம் ஜி ஆர் பிறந்தநாள் விழா|     ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் சுவால்பேட்டை பிள்ளையார் கோவில் அருகே அ இ அ தி மு சார்பில் மறைந்த முன்னாள் முதல்வர் பாரத ரத்னா டாக்டர் எம் ஜி ஆர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது..இதில்  மாவட்ட வர்த்தக அணி இணை செயலாளர் எம் பி சோமசுந்தரம் கலந்து  டாக்டர் எம் ஜி ஆர் திரு உருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தார் .தொடர்ந்து பொதுமக்களுக்கு இனிப்புகள் மற்றும் அன்னதானம் வழங்கினார்..இதில் நகர அண்ணா தொழிற்சங்கம் தலைவர் சரவணன் உட்பட முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.  
Image
 RANIPET 17.01.2026  கல்வித்துறை அலுவலர் எஸ் முத்தம்மாள் பிறந்தநாள் விழா    ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அன்வர்திகான்பேட்டை பகுதியில் சென்னை கல்வித்துறை அலுவலர் எஸ் முத்தம்மாள் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது .    விழாவில் சிறப்பு அழைப்பாளராக ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் கிழக்கு ஒன்றியம் அகில இந்திய தேசிய காங்கிரஸ் ஒன்றிய தலைவரும் ,காவேரிப்பாக்கம் முன்னாள் ஒன்றிய குழு துணைத் தலைவர்  பிரியங்கா காந்தி சங்கட்டன் அகில இந்திய தேசிய துணைத் தலைவருமான  எஸ் உதயகுமார் கலந்து கொண்டு மாணவர்களுக்கும் பொதுமக்களுக்கும் இனிப்புகளை வழங்கினார்.
Image
RANIPET WEST NEMILY     நெமிலி வடக்கு திமுக ஒன்றிய செயலாளர் மணிவண்ணன் பொங்கல் தொகுப்பு  வழங்கினார்       ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி வடக்கு திமுக ஒன்றியத்திற்குட்பட்ட மேல் வெண்பாக்கம் கிராமத்தில் உள்ள நியாயவிலைக் கடையில் பொங்கல் தொகுப்பு வழங்கும் விழாவில் சிறப்பு அழைப்பாளராக ஒன்றிய செயலாளர் மணிவண்ணன் கலந்து கொண்டு  குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழக அரசின் ரூபாய்  3000 பொங்கல் பரிசு மற்றும் பச்சரிசி ,சர்க்கரை , விலையில்லா வேட்டி சேலை யுடன் முழு கரும்பு வழங்கினார்.அப்போது கட்சியின் முக்கிய நிர்வாகிகள் உடன் இருந்தனர். RANIPET WEST NEMILY
Image
  பரமேஸ்வரமங்களம் ஊராட்சியில்  மாவட்ட கவுன்சிலர்  பெ.சுந்தரம்மாள் பொங்கல் தொகுப்பு வழங்கினார். ராணிப்பேட்டை மாவட்டம்   நெமிலி மத்திய ஒன்றியத்திற்கு உட்பட்ட சயனபுரம்,பரமேஸ்வரமங்களம், செல்வமந்தை, மேல் களத்தூர்  ஊராட்சி நியாய விலைக் கடைகளில் பொங்கல் தொகுப்பு வழங்கும் விழா நெமிலி மத்திய ஒன்றிய செயலாளர் எஸ் ஜி சி பெருமாள் தலைமையில் நடைபெற்றது.ஊராட்சி மன்றத் தலைவர்கள்  எ ஆறுமுகம், வி.சசிகலா வெங்கடேசன், என் .சங்கர், வங்கி செயலாளர்கள் குணசேகரன்,அன்பு,ரவிச்சந்திரன் ஆகியோர்  முன்னிலை வகித்தனர். விழாவில் சிறப்பு அழைப்பாளராக  மாவட்ட கவுன்சிலர்  பெ.சுந்தரம்மாள்  கலந்து கொண்டு நியாய விலை கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு தமிழக அரசின் ரூபாய்  3000 பொங்கல் பரிசு மற்றும் பச்சரிசி சர்க்கரை உடன் விலையில்லா வேட்டி சேலை யுடன் முழு கரும்பு வழங்கினார். இதில்  ஒன்றிய  துணைச் செயலாளர்கள்  எ .சீனிவாசன்,எம் தமீன் அன்சாரி,மாவட்ட பிரதிநிதி,கே .சுரேஷ் கிளை நிர்வாகிகள்  சேட்டு,  எல்லப்பன், .மணிகண்டன், .மணி, பார...
Image
RANIPET NEMILY 06.01.2026   பொங்கல் பரிசு ரூ.3000 , 10 லட்சம் மாணவர்களுக்கு லேப்டாப் .தமிழ்நாடு முதலமைச்சருக்கு நன்றி,நெமிலி ஒன்றிய குழு கூட்டத்தில் தீர்மானம்..     ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில்  மாதாந்திர யூனியன் கவுன்சில் கூட்டம் சேர்மன் வடிவேல் தலைமையில் நடைபெற்றது. பி டி ஓ ஜெயஸ்ரீ முன்னிலை வகித்தார். கூட்டத்தில்  கவுன்சிலர்கள் தங்கள் பகுதிக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து கோரிக்கை மனுக்களாக சேர்மனிடம் அளித்தனர். தொடர்ந்து  கவுன்சிலர்கள் பேசியதாவது. ஆருண்(சுயேட்சை): பனப்பாக்கம் சிப்காட் வளாகத்தில் உள்ள டாடா மோட்டார்ஸ் கம்பெனியில் உள்ளூர் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்குவதில் முன்னுரிமை அளிக்க வேண்டும். துறையூர் - பள்ளிப்பட்டறை ரோட்டை உடனடியாக சீரமைத்து தர வேண்டும். வடிவேல்(சேர்மன்): இது குறித்து மாவட்ட உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். சுகுமார்(அதிமுக): திருமால்பூர் பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும்.  குற்றச்சம்பவங்களை தடுக்கும் சி...
Image
  அரக்கோணம் நகரம் என் வாக்கு சாவடி வெற்றி வாக்கு சாவடி கூட்டம்நகர கழக செயலாளர்   வி எல் ஜோதி தலைமையில் நடைபெற்றது    ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் நகரம் என் வாக்கு சாவடி வெற்றி வாக்கு சாவடி கூட்டம் வார்டு எண்: 34 , பூத் எண் : 150-ல் நகர கழக செயலாளர்  வி எல் ஜோதி தலைமையில் நடைபெற்றது இதில் நகர கழக நிர்வாகிகள்,மாவட்ட அமைப்பாளர்கள் ,நகர அமைப்பாளர்கள் & வட்ட செயலாளர் BLA,BLA-2 , BLC ,BDA மற்றும் பூத்தில் உள்ள பொதுமக்கள் கலந்து கொண்டனர்.   RANIPET - ARAKKONAM 05.01.2026          
Image
RANIPET 05.01.2026   தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கினங்க என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி கூட்டம்,ஒன்றிய  செயலாளர் பெருமாள் தலைமையில் நடைபெற்றது.     தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கினங்க தமிழ்நாடு துணை முதலமைச்சர் திமுக இளைஞர் அணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை வழியில் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி வழிகாட்டுதலில் மாநில சுற்றுச்சூழல் அணி துணைச் செயலாளர் பசுமை செம்மல் ஆர் வினோத் காந்தி அறிவுறுத்தலின் பேரில்        நெமிலி மத்திய ஒன்றியத்திற்கு உட்பட்ட சயனபுரம் ஊராட்சி சயனபுரம் பூத் எண்- 221,222 ல் என் வாக்குச்சாவடி வெற்றி வாக்குச்சாவடி பாக முகவர்கள் கூட்டம் மற்றும்  திமுக சாதனைகளை விளக்கும் துண்டு பிரசுரங்களை பொதுமக்களுக்கு வழங்கும் நிகழ்ச்சி நெமிலி மத்திய ஒன்றிய கழக செயலாளர்  எஸ் ஜி சி .பெருமாள் தலைமையில் நடைபெற்றது.       இதில் அவைத்தலைவர் பா.செ.நரசிம்மன்,துணைச் செயலாளர்கள் அ.சீனிவாசன்,எம்.தமீன் அன்சாரி,சாவித்திரி,சுந்தரவடிவேலு,மாவட்ட பிரதிநிதிகள்  சி ஜி சண்முகம்,க.தே.த...
Image
   கருந்தட்டான்குடி நகர திராவிட கூட்டுறவு வங்கி,  ஐ.குமாரசாமி நிலையம்" என பெயர் சூட்டவேண்டும்.         தஞ்சாவூர் மாவட்டம் கரந்தை கருந்தட்டான்குடி நகர திராவிட கூட்டுறவு வங்கி இயங்குவதற்கு தன் வாழ்த வீட்டை‌ தானமாக கெடுத்தது  உயர்ந்த உள்ளம் கொண்ட மாமனிதர் ஐ.குமாரசாமி பிள்ளை  நினைவாக புதிதாக கட்டப்பட்டு வரும்  கட்டிடத்திற்கு " ஐ.குமாரசாமி நிலையம்" என பெயர் சூட்டவேண்டும் மேலும் சிமெண்ட் எழுத்துகளால் ஐ.குமாரசாமி பிள்ளை  பெயர்  பொறிக்க உத்தரவு இட வேண்டும் என பிரியங்கா காந்தி சங்கட்டன் அகில இந்திய  அகில இந்திய தேசிய தலைவர் கமல்ஜித் சிங் , தேசிய இளைஞர் அணி தலைவர்  அருண்குமார் , தேசிய துணைத் தலைவர் எஸ் உதயகுமார் ஆகியோர் சார்பாக  மாநில செயல் தலைவர் மற்றும் தஞ்சை மாநகர மாவட்ட தலைவர் கோ.ராகவேந்திர தாசன்.தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
Image
 RANIPET 04.01.2026  பிரியங்கா காந்தி சங்கட்டன் அகில இந்திய தேசிய துணைத் தலைவர் எஸ் உதயகுமார் நேரில் ஆய்வு .    ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் ஒன்றியம்  No 39 சோளிங்கர் சட்டமன்ற தொகுதி அன்வர்திகான்பேட்டை வாக்குச்சாவடி.எண் 199,.200,.201 வாக்குச்சாவடி.மையத்திற்கு ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் கிழக்கு ஒன்றியம் அகில இந்திய தேசிய காங்கிரஸ் ஒன்றிய தலைவரும் ,காவேரிப்பாக்கம் முன்னாள் ஒன்றிய குழு துணைத் தலைவர்  பிரியங்கா காந்தி சங்கட்டன் அகில இந்திய தேசிய துணைத் தலைவருமான  எஸ் உதயகுமார் .  நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டு வாக்குச்சாவடி அலுவலர்கள் பொதுமக்களிடம் இருந்து படிவங்களை பெறுவதை பார்வையிட்டார்.  RANIPET - SOLIGUR 04.01            
Image
  எம் பி சோமசுந்தரம்  தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநில செயல் தலைவர் கே.எம்  தேவராஜை நேரில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றார்.           அரக்கோணம் நகர அனைத்து வணிகர் சங்கம்  இணை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள  எம் பி சோமசுந்தரம்  தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநில செயல் தலைவர் கே.எம்  தேவராஜை நேரில் சந்தித்து சால்வை அணிவித்து வாழ்த்து பெற்றார். அப்போது அரக்கோணம் நகர அனைத்து வணிகர் சங்கங்களின் பொருளாளர் கே எம் பி  ஜனார்த்தனன், துணை தலைவர் ஆர் கே ஜி  மணிகண்டன், செயலாளர்கள் ஆர் வெங்கட்டரமணன்,  கே பி எம்  மோகன், மாவட்ட செய்தி தொடர்பாளர் கெஜபதி ,இணை செயலாளர்கள் வாட்டர் ஹரி, , சுதாகர், பத்மநாபன், எத்திராஜ், வாசு, குட்டி (எ) பத்மநாபன் ஆகியோர் உடன் இருந்தனர்.

நெமிலி மத்திய ஒன்றியம் திமுக

Image
திமுக தேர்தல் அறிக்கைக்கு உங்களது கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள். சுவரொட்டிகள். ஒன்றிய செயலாளர் பெருமாள் தலைமையில்  ஓட்டப்பட்டு வருகிறது. ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி மத்திய ஒன்றிய திமுக சார்பில் ஒன்றியம் முழுவதும் திமுக தேர்தல் அறிக்கைக்கு உங்களது கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.ஸ்டாலின் தொடரட்டும், தமிழ்நாடு வெல்லட்டும்! என்ற வாசகங்கள் கொண்ட சுவரொட்டிகள்  நெமிலி மத்திய ஒன்றிய திமுக செயலாளர் லயன்ஸ் எஸ் ஜி சி பெருமாள் தலைமையில் திமுகவினர் ஒட்டி வருகிறார்கள்.
Image
 அரக்கோணம் முருகன் மருந்தக உரிமையாளரும், ரோட்டரி சங்கம் போலியோ பிளஸ் தலைவரும், தமிழ் படைப்பாளர்கள் சங்கத்தின் கௌரவ ஆலோசகரும், போலீஸ் பொதுமக்கள் நண்பர்கள் குழுவின் மாவட்ட துணை தலைவருமான ஆர்.வெங்கட்டரமணன் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநில செயல் தலைவர். கே எம் தேவராஜ் க்கு சால்வை அணிவித்து 2026 ஆன் ஆங்கில புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார் அப்போது பொருளாளர் கே எம் பி ஜனார்த்தனன் உடன் இருந்தார்     
Image
  தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநில செயல் தலைவர் கே எம் தேவராஜ் இடம்  இணைச் செயலாளர் எம் பி சோமசுந்தரம் புத்தாண்டு வாழ்த்து பெற்றார்.     2026 ஆம் ஆண்டு ஆங்கில புத்தாண்டு முன்னிட்டு  தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை மாநில செயல் தலைவர். கே எம் தேவராஜ் அவர்களை அவரது இல்லத்தில்  இணைச் செயலாளர் எம் பி சோமசுந்தரம் நேரடியாக சந்தித்து சலவை அணிவித்து புத்தாண்டு வாழ்த்து பெற்றார், அப்போது பொருளாளர் கே எம் பி ஜனார்த்தனன், , துணைத் தலைவர் ஆர் கே ஜி மணிகண்டன் , இணைச் செயலாளர் சோமசுந்தரம்,செய்தி தொடர்ப்பாளர் கெஜபதி, இணைச் செயலாளர் சுதாகர்,செயலாளர் பூக்கடை சாய்,நகர செயலாளர் மோகன்,ஸ்ரீ வாராஹி அம்மன் ஆலயம் தர்மகர்த்தா முனுசாமி,முருகவேள் ஆகியோர்  உடன் இருந்தனர்.